Saturday, September 30, 2023
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சி பாடசாலையில் தூக்கில் தொங்கிய இளைஞனால் அதிர்ச்சி !

கிளிநொச்சி பாடசாலையில் தூக்கில் தொங்கிய இளைஞனால் அதிர்ச்சி !

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முகமலை பகுதியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞரின் சடலத்தை ஆசிரியர் ஒருவர் அவதானித்ததையடுத்து சம்பவம் தொடர்பில் கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் வாலிபர் தூக்கு போட்டு இறந்த சம்பவம் அப்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments