Thursday, September 28, 2023
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிளிநொச்சியில் தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிளிநொச்சி – கல்மடுநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று இரவு புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று, வீட்டின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மற்றும் 49 ஆயிரத்து 50 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இரண்டு பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்களுக்கோ மற்ற பொருட்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை.

இன்று அதிகாலை வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்தபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.

பின்னர், தரம்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தடயவியல் போலீஸார் உதவியுடன் தரம்புரம் போலீஸார் விரைவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments