Monday, March 27, 2023
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் இடம்பெற்ற சுகயீன விடுப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற சுகயீன விடுப்பு போராட்டம்!

கிளிநொச்சி கண்டாளை சுகாதார வைத்திய அதிகாரியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று (27-10-2022)சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஒருவரை பொதுமக்கள் மத்தியில் வைத்து அவதூறாக பேசியதன் விளைவாக மன உளைச்சலுக்கு உள்ளான குறித்த உத்தியோகத்தர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் தப்பியுள்ளார்.

மேற்படி குடும்ப நல உத்தியோகத்தரை விடுவிப்பதற்காக அவருடைய வெற்றிடத்திற்கு பதிலாக ஒரு குடும்ப நல உத்தியோகத்தரை பொறுப்பேற்குமாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது 13 குடும்ப நல உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டிய போதும், போதிய ஆளணி வளமின்மையால் இரண்டு மூன்று பிரிவுகளை ஒரு உத்தியோகத்தர் பராமரிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக தங்களுடைய பணியை முன்னெடுப்பதில் இடர்பாடுகள் காணப்படுகின்றது என இன்றைய சுகயீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments