Saturday, September 30, 2023
Homeஇலங்கை செய்திகள்ஓட்டல் அறைகளில் திடீரென மரணமடையும் இளைஞர்கள்!

ஓட்டல் அறைகளில் திடீரென மரணமடையும் இளைஞர்கள்!

நாட்டில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ள அதேவேளை, உடனடி பாலுணர்வை ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் ஹோட்டல் அறைகளிலேயே உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென மரணமடையும் இளைஞர்களின் பெரும்பாலான பிரேத பரிசோதனைகளில் அவர்கள் தமது பங்காளிகளுடன் இருந்த போது உடனடியாக பாலுணர்வை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டமை தெரியவந்துள்ளதாக கொழும்பு மேலதிக மரண விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களில் குறிப்பாக இருபது முதல் முப்பத்தேழு வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மருத்துவ ஆலோசனையின்றி பல்வேறு வகையான பாலுணர்வு மருந்துகளைப் பயன்படுத்தத் தூண்டப்படுகிறார்கள்.

கொழும்பில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்து இளைஞர்கள் மருத்துவ ஆலோசனையின்றி பல்வேறு மருந்துகளை பயன்படுத்துவதால் மரணமடைவதாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாலுணர்வைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்வதற்கு முன்பு இதுபோன்ற இளைஞர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments