Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்எரிவாயு தொடர்பில் வெளியான முக்கியத்தகவல் : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

எரிவாயு தொடர்பில் வெளியான முக்கியத்தகவல் : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது நான்காயிரத்து தொள்ளாயிரத்து பத்து ரூபாயிற்கு விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 200 ரூபாயிற்கு மேல் குறைக்கப்படவுள்ளது.

எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நாடு முழுவதும் இரண்டரை மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

முத்துராஜவெலயில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு முனையத்தில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments