Thursday, March 30, 2023
Homeஇலங்கை செய்திகள்எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறையும் என சபையின் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிரேம ஜயந்த, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வடைவதாக தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால் புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி கொழும்பு துறைமுகத்தில் இறங்கும் பொருட்கள் குறைந்த விலையில் வந்து சேரும் என்றார்.

இதன்படி, இந்த குறைப்பின் பலன் நுகர்வோருக்கு வழங்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments