Saturday, September 30, 2023
Homeஇலங்கை செய்திகள்உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல் !

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல் !

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒர் இந்தியர் என பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகம் கோயம்பத்தூரைச் சேர்ந்த மொஹமட் அசாருதீன் என்பவரே அவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நபர் ஐ.எஸ் தீவிரவாத முகவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பிரசூரமாகும் பத்திரிகையொன்றில் அசருதீன் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களைப் போன்றே இந்தியாவிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்த அசருதீன் திட்டமிட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவல்களை கண்டறிந்துள்ளதாக குறித்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தாக்குதல் நடத்த முன்னதாக அசருதீனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொயம்பத்தூர் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பது அம்பலமாகியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments