Thursday, September 21, 2023
Homeவாழ்வியல்உடற்பயிற்சி செய்ய சரியான நேரம் எது?

உடற்பயிற்சி செய்ய சரியான நேரம் எது?

ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் சில மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஆனால் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் காலை வேளை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்

காலை உடற்பயிற்சி, காலையில் சைக்கிள் ஓட்டுதல், காலையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் உள்ள மகிழ்ச்சியான ஹார்மோன்களைத் தூண்டி, நினைவாற்றல் மேம்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

காலையில் உடற்பயிற்சி செய்தால், நாள் முழுவதும் முன்கோப படபடப்பு இருக்காது என்றும், காலையில் உடற்பயிற்சி செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், உடல் உழைப்பு மிகவும் குறைந்துள்ள இந்த நவீன காலத்தில் காலையில் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments