Monday, November 28, 2022
Homeராசிபலன்கள்இன்றைய ராசிபலன் 17/11/2022

இன்றைய ராசிபலன் 17/11/2022

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்து கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

கன்னி: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும் . வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து விலகும். கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நம்பிக்கை குறைவால் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

மகரம்: சந்திராஷ்டம் இருப்பதால் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். போராட்டமான நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments