Monday, January 30, 2023
Homeசினிமா'இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம்' பிக்பாஸ் டைட்டில் வென்ற பின் உருக்கமாக பதிவிட்ட அசிம்!

‘இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம்’ பிக்பாஸ் டைட்டில் வென்ற பின் உருக்கமாக பதிவிட்ட அசிம்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

2-வது வாரம் முதல் ஒவ்வொரு வாரமும் ஓட்டிங் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இறுதி வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வென்ற அமுதவாணன் உடன், அசீம், கதிரவன், ஷிவின், விக்ரமன் மைனா நந்தினி என 6 பேர் இருந்தனர்.

இதில் கதிரவன் மற்றும் அமுதவாணன் இருவரும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை தொடர்ந்து நந்தினியை புது விதமாக வாரத்தின் நடுவிலேயே பிக்பாஸ் எலிமினேட் செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.

அதனை தொடர்ந்து விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் மட்டும் இறுதியாக இருந்தனர். இவர்களில் யார் வெற்றியடைவார்கள் என்று சோசியல் மீடியாக்களில் பல கலேபரங்களே நடந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று வெளியான ஃபைனலில்ஸ் அசீம் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அசீம் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த அசிம், தொடர்ந்து தனது மகனுக்காக ஆடுவதாக பல முறை குறிப்பிட்டு வந்தார்.

தற்போது டைட்டிலும் வென்றுள்ள அசீம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, தனது மகன் ரயானை நேரில் சந்தித்துள்ளார். பிக் பாஸ் கோப்பையை மகன் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அசிம், “எனது உயரம் உனது இலக்கல்ல…நீ உயரனும் என்பதே என் இலக்கு…! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம், என் செல்லமே!. 105 நாட்கள் இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தேன்” என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

எனது உயரம் உனது இலக்கல்ல…
நீ உயரனும் என்பதே என் இலக்கு…!

இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம், என் செல்லமே!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments