Thursday, March 30, 2023
Homeஇலங்கை செய்திகள்அமெரிக்க முக்கிய பிரதிநிதியை சந்தித்த சுமந்திரன்.

அமெரிக்க முக்கிய பிரதிநிதியை சந்தித்த சுமந்திரன்.

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்தான் உட்பட பல கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வுக்கான நம்பிக்கைகள் குறித்து விவாதித்ததாக விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டவர்கள் தீர்வுகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும்போது, ஜனநாயகம் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

பல கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்

மேலும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூவ் ஹக்கீம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், இன்று (01.02.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தகக்து. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments