Thursday, March 30, 2023
Homeஇந்திய செய்திகள்அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை …தற்போது என்ன விலை தெரியுமா ?

அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை …தற்போது என்ன விலை தெரியுமா ?

மார்ச் மாதம் முதல் நாளான இன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

இன்று மார்ச் 1ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ₹50 உயர்ந்து 1118.50 க்கு விற்பனையாகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் , கேஸ் சிலிண்டர் விலை ₹ 1068.50 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments